பொழுதுபோக்கு
வரதட்சணையாக ரெஸ்டாரண்ட்: சுதாகர் வைத்த செக்; பாக்யா முடிவு என்ன?

வரதட்சணையாக ரெஸ்டாரண்ட்: சுதாகர் வைத்த செக்; பாக்யா முடிவு என்ன?
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையி்ல், கடந்த சில வாரங்களாக இனியாவின் கல்யாணம் தொடர்பான காட்சிகள் தான் அதிகம் வருகிறது. அந்த வகையில் அடுத்த வாரத்திற்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.இல்லத்தரசியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள பாக்கியலட்சுமி சீரியலில், இனியா வேலைக்காரி செல்வியின் மகன் ஆகாஷை விரும்புகிறாள். இதனால் வீட்டில் எதிர்ப்பு வர, பாக்யா இனியாவுக்கு அட்வைஸ் செய்து இருவரையும் பிரிந்து வைக்கிறார். அதன்பிறகு பாக்யாவின் ரெஸ்டாரண்டை சுதாகர் என்பவர் விலைக்கு கேட்க, பாக்யா தர முடியாது என்று சொல்லிவிடுகிறாள்.அதன்பிறகு பாக்யாவை சந்திக்கும் சுதாகர் இந்த ரெஸ்டாரண்டை வாங்கி காட்டுகிறேன் என்று சாவல் விட்டுவிட்டு, கோபியின் மூலமாக இனியாவை தனது மகனுக்கு பேசி முடித்துவிடுகிறார். தற்போது இனியா சுதாகர் மகன் திருமணம் தொடர்பான எபிசோடுகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்பது தொடர்பான ப்ரமோ வெளியாகியுள்ளது.இதில் பாக்யாவின் ரெஸ்டாரண்ட்க்கு வரும் சுதாகர், உங்கள் மகள் இனியாவுக்கு வரதட்சனையாக நாங்கள் எதுவுமே கேட்கவில்லை. அதனால் இந்த ரெஸ்டாரண்டை உங்கள் மகள் பெயரில் எழுதி வைத்துவிடுங்கள் என்று சொல்ல, பாக்யா முடியாது என்று சொல்கிறாள். உங்க பொண்ணும் என் பையனும் சேர்ந்து வாழனும்னா நீங்க இதை செய்துதான் ஆக வேண்டும். நாளைக்கு ரிஷப்ஷன் நடக்கனுமா வேண்டாமா என்று கேட்க, பாக்யா அதிர்ச்சியாகிறாள்.அதன்பிறகு, வீட்டில், பாக்யா ரெஸ்டாரண்டடை பற்றி யோசிக்காத இனியாவின் வாழ்க்கையை பாரு என்று சொல்லி கோபி அட்வைஸ் செய்ய, பாக்யா அடுத்து என்ன முடிவு செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இனியாவுக்கு, பாக்யா ரெஸ்டாரண்டை எழுதி வைப்பாரா? அல்லது செல்வியின் மகன் ஆகாஷ்க்கு இனியாவை திருமணம் செய்து வைப்பாரா? கோபி இதில் என்ன முடிவு எடுப்பார்? பாக்யா தனது அடையாளமாக இருக்கும் ரெஸ்டாரண்டை விட்டுக்கொடுப்பாரா என்பது போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளதால், அடுத்து வரும் எபிசோடுகள் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.