இந்தியா
ஃபெஞ்சல் புயல்… மாவட்ட ஆட்சியர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை!

ஃபெஞ்சல் புயல்… மாவட்ட ஆட்சியர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை!
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று (நவம்பர் 30) மாலை காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையை கடக்க உள்ளது.
இதன்காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழையை எதிர்கொள்வதற்காக, வருவாய், பேரிடர், காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.