இந்தியா
Amazon Black Friday Sale: அமேசானின் முதல் பிளாக் ஃபிரைடே சேல் – 75% வரையிலான அட்டகாச தள்ளுபடிகள் அறிவிப்பு

Amazon Black Friday Sale: அமேசானின் முதல் பிளாக் ஃபிரைடே சேல் – 75% வரையிலான அட்டகாச தள்ளுபடிகள் அறிவிப்பு
அமேசானின் முதல் பிளாக் ஃபிரைடே சேல் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. இதில் ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட முன்னணி தயாரிப்புகளின் மீது அதிகபட்ச தள்ளுபடிகள் வழங்கப்படுவதாக அமேசான் அறிவித்துள்ளது.
அமேசான் இந்தியா தனது முதல் பிளாக் ஃபிரைடே விற்பனையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. டிசம்பர் 22-ந் தேதி வரை இந்த விற்பனை தொடரும் என்று அமேசான் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விற்பனையின் போது, எலக்ட்ரானிக் பொருட்களின் மீது 75% மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 65% வரை தள்ளுபடி அறிவித்துள்ளது.
இந்த நிகழ்வானது சர்வதேச மற்றும் உள்ளூர் பிராண்டுகளில் இந்திய வாடிக்கையாளர்களுக்கு எதிர்பார்க்க முடியாத தள்ளுபடியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அமேசான் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, இந்தியாவில் அதன் முதல் பிளாக் ஃபிரைடே சேல் வெள்ளிக்கிழமை (29.11.2024) முதல் டிசம்பர் 22 வரை இந்த விற்பனை தொடரும் என்று அறிவித்துள்ளது. பிளாக் ஃபிரைடே சேல் என்பது உலகின் பல பகுதிகளில் விற்பனையை குவிக்கும் ஒரு பெரிய நிகழ்வாக கருதப்படுகிறது. இருந்தாலும், அமேசான் இந்தியாவில் முதல் முறையாக பிளாக் பிரைடே விற்பனையை தொடங்கியுள்ளது.
தற்போதைய விற்பனையின் போது, அமேசான் ஆப்பிள், சோனி, சாம்சங் மற்றும் அமாஸ்ஃபிட் போன்ற சிறந்த எலக்ட்ரானிக் பிராண்டுகளுக்கு தள்ளுபடியை வழங்குகிறது. மேலும் நைக், அடிடாஸ், டாமி ஹில்ஃபிகர், ஜீன்-பால், கால்வின் க்ளெயின் மற்றும் பல சிறந்த லைஃப்ஸ்டைல் பிராண்டுகளுடனும் ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளது.
அமேசான் இந்தியாவின் பிரிவுகளின் துணைத் தலைவர் சௌரப் ஸ்ரீவஸ்தவா ஒரு அறிக்கையில், இந்த புதிய விற்பனையைப் பற்றி பேசுகையில், “இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் வரவேற்பால், ’அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2024’ சாதனை வெற்றியாக அமைந்துள்ளது.
இப்போது, அமேசானின் பிரபலமான ஷாப்பிங் நிகழ்வான பிளாக் ஃபிரைடேவை, Amazon.in இல் முதன்முறையாக இந்தியாவிற்குக் கொண்டு வருவதன் மூலம், இந்தியா மற்றும் சர்வதேச பிராண்டுகளின் எலக்ட்ரானிக்ஸ், அழகு, வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் அலங்காரங்கள் போன்றவற்றில் தள்ளுபடியைக் கொண்டு வருகிறோம். அனைத்து வகையான வாடிக்கையாளர்களுக்கும், விதிவிலக்கான மதிப்பு மற்றும் ஷாப்பிங் அனுபவத்தை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டின் மற்றொரு மைல்கல்லை இது குறிக்கிறது,” என்று கூறியுள்ளார்.
ஆப்பிள் மேக்புக் ஏர், ஐபோன் 15 வரிசைகள், சாம்சங் கேலக்ஸி எஸ்23, சாம்சங் கேலக்ஸி பட்ஸ் மற்றும் பலவற்றில் சிறந்த டீல்களுடன் மொபைல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆக்சஸரீஸில் 40 முதல் 75% வரை தள்ளுபடியை அமேசான் வழங்குகிறது.
இந்த இ-காமர்ஸ் நிறுவனமானது, சியோமியின் 32 இன்ச் ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவி, சோனி பிளேஸ்டேஷன் 5 டிஜிட்டல் பதிப்பு மற்றும் சோனி பிளேஸ்டேஷன் டிஜிட்டல் எடிஷன் ஸ்லிம் ஆகியவற்றில் சில அற்புதமான தள்ளுபடிகளையும் வழங்குகிறது.
அமேசான், பேனாசோனிக், எல்ஜி, சாம்சங் மற்றும் பலவற்றின் ஏர் கண்டிஷனர்கள் போன்ற வீட்டில் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய பொருட்களுக்கு 65% வரை தள்ளுபடியை வழங்குவதை உறுதியளிக்கிறது. லக்கேஜ்கள், ஹேண்ட்பேக்குகள் மற்றும் சில முக்கிய பிராண்டுகளின் பொருட்களுக்கு 40% முதல் 70% வரையிலான தள்ளுபடியையும் இந்நிறுவனம் வழங்குகிறது.
மேலும், இந்த விற்பனையின் போது, டாபர், செபமெட் லோஷன்ஸ் மற்றும் டாடா டீ போன்ற பிராண்டுகளின் குளிர்கால அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பருவகால தேர்வுகள் ஆகியவற்றிலும் தள்ளுபடிகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.