Connect with us

சினிமா

RMV நினைவு ஆவணப்படத்திற்காக உருக்கமாக பேசிய பிரபல நடிகர்..! நடந்தது என்ன..?

Published

on

Loading

RMV நினைவு ஆவணப்படத்திற்காக உருக்கமாக பேசிய பிரபல நடிகர்..! நடந்தது என்ன..?

தமிழ் சினிமா மற்றும் அரசியல் உலகில் தனித்துவமான இடத்தை பெற்றிருந்த ஆர்.எம்.வீரப்பனின்  நினைவாக தயாரிக்கப்படும் ஆவணப்படத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் உருக்கமான பேட்டி ஒன்றினை வழங்கியுள்ளார். இந்தப் பேட்டியில், அவர் தன் கடந்த கால அனுபவங்களை வெளிப்படையாகவும் உணர்ச்சி பூர்வமாகவும் பகிர்ந்துள்ளார்.ரஜினிகாந்த் அதில் கூறியதாவது, “ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் அரசியல் உலகில் மட்டுமல்லாது, தமிழ் சினிமா வளர்ச்சிக்கும் அதிகளவு பங்காற்றியவர். அவரைப் பற்றி பேசுவது எனக்கு பெரும் பாக்கியம். அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட செய்தியை கேட்டவுடன், நான் அதிர்ச்சியில் உறைந்தேன். அந்த இரவு முழுவதும் எனக்கு தூக்கம் வரவில்லை.” என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்தார்.தொடர்ந்து, “ஜெயலலிதாவை எதிர்க்க எனக்குப் பல காரணங்கள் இருந்தாலும் ஆர்.எம்.வீரப்பன் அவர்களை அநியாயமாக நீக்கியதே அதற்கான முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் தான், பின்னர் நான் ஜெயலலிதாவின் அரசியல் விடயங்களை எதிர்த்தேன்.” என்று திறம்பட விளக்கினார்.  ரஜினிகாந்தின் உரையாடல், அவரது மதிப்பையும், ஆர்.எம்.வீரப்பன் மீது வைத்திருந்த அழியாத பாசத்தையும் உலகிற்கு வெளிப்படுத்துகின்றது. இந்த ஆவணப்படம் வெளிவரும் போது, தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது, அரசியல் மற்றும் சினிமா ஆர்வலர்களும் இதனை ஆதரிப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன