Connect with us

பொழுதுபோக்கு

கூலி படத்தின் தெலுங்கு திரையரங்க உரிமை: எத்தனை கோடிக்கு விற்பனையானது தெரியுமா?

Published

on

COOLIE movie release date FROM 14 AUGUST 2025 Tamil News

Loading

கூலி படத்தின் தெலுங்கு திரையரங்க உரிமை: எத்தனை கோடிக்கு விற்பனையானது தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்தின் 171-வது படமாக “கூலி” திரைப்படம் தயாராகி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகின்றன.”கூலி” திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ரஜினியுடன் சுருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், அமீர்கான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.இந்நிலையில், ஆகஸ்ட் 14-ம் தேதி கூலி திரைப்படம் வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதே நாளில், ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் த்ரில்லர் படமான வார்-2 வெளியாகிறது. இதனால், கூலி படத்தின் மீதான டிமாண்ட் அதிகரித்த நிலையில், அனைத்து விநியோக உரிமைகளையும் தக்க வைத்துக்கொண்ட தயாரிப்பாளர்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் திரையரங்குகளில் படத்தை வெளியிட ரூ.50 கோடி ரூபாய் கேட்பதாக கூறப்படுகிறது. காரணம் கூலி படத்தில் உச்சபட்ச நடிகர் பட்டாளே நடித்துள்ளதால் இந்திய அளவில் படம் பேசப்படும் என்பதாலே.லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களைப் போலல்லாமல், கூலி படம் (LCU) இடம்பெறவில்லை. இந்தப் படத்தில் தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களான நாகார்ஜுனா, உபேந்திரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும், ஆமிர் கானின் சிறப்புத் தோற்றமும் இதில் இடம்பெற்றுள்ளது. கூலி படத்தின் போட்டியைக் கருத்தில் கொண்டு தெலுங்கு திரையரங்க உரிமை ரூ.50 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது.பாகுபலி, கே.ஜி.எப் உரிமை மற்றும் புஷ்பா படங்கள் போன்ற பான்-இந்தியா படங்களுடன் பாலிவுட்டில் கால் பதித்த தென்னிந்திய திரைப்படத் துறைகளுக்கு சவால் விடும் முதல்படமாக கூலி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 2 படங்களும் மிகப்பெரிய கூட்டத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பாக்ஸ் ஆபிஸ் பட்டைய கிளம்பும் எனக் கூறப்படுகிறது.ஆர்.ஆர்.ஆர். மற்றும் தேவரா ஆகிய 2 தொடர் வெற்றி பிறகு ஜூனியர் NTR-க்கு வார்-2 படம் வெளியாக உள்ளது.கடந்த காலங்களில், ரஜினிகாந்தின் 2.0, கமல்ஹாசனின் விக்ரம் மற்றும் விஜய்யின் லியோ போன்ற தமிழ்ப்படங்கள் தெலுங்கு பேசும் மாநிலங்களில் நல்ல வசூலைப் பெற்றன. எனவே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கூலி நிச்சயம் நல்ல வசூலை கொடுக்கும் என விநியோகஸ்தர்கள் நம்புகின்றனர். இதனிடையே, கூலி படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனமான அமேசான் பிரைம் சுமார் ரூ.120 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன