இலங்கை
ஆழும் அதிகாரத்தில் இருக்கும் கட்சியை வெல்ல செய்வதனாலேயே மக்களுக்கு ஓரளவாவது நன்மை கிடைக்கும்

ஆழும் அதிகாரத்தில் இருக்கும் கட்சியை வெல்ல செய்வதனாலேயே மக்களுக்கு ஓரளவாவது நன்மை கிடைக்கும்
தமிழ் தேசியம் தேடுபவர்களாலும் அதனை வைத்து வியாபாரம் செய்பவர்களாலும் இதுவரையும் எந்த பிரயோசனமும் இல்லை இனிமேலும் கிடையாது.
தமிழ் தரப்பால் ஐ நாவிலும் ஒன்றும் கிடையாது.
அதற்கு இந்தியா விடாது.
இந்தியாவுக்கு தமிழ் தரப்பை விட ஆளும் கட்சி எதுவோ அதுவே முக்கியம்.
இலங்கையை தமிழனோ சிங்களவனோ இஸ்லாமியனோ எவன் ஆழுகிறானோ எவனுக்கு அதிக அதிகாரம் உள்ளதோ அவனோடு கூடியே எம் மக்களின் தேவைகளை பெற முடியும்.
தமிழ் தரப்புக்கள் போட்டி போட்டு மக்களையும் வெளிநாட்டில் இருந்து பிச்சை போடும் பொழுதுபோக்கிற்கு தேசியம் பேசுகிறவர்களையும் குஷிபடுத்த நடத்த முடியாத வாக்குறுதிகளை கூறி தாம் அரியாசனத்தை பிடிக்க பொய் சொல்லும் தமிழரை நம்புவது நல்லதல்ல.
மக்களுக்கு நன்மை தேவையா?
இடம் பொருள் ஏவல் பார்த்து அடிக்கவேண்டும்.
இஸ்ரேல் ஏன் அமெரிக்காவுடன் சேர்ந்து நிற்கிறது?
சற்றுப் புரிந்து மக்கள் தம்மை முதல் காக்க காய் நகர்த்தவேண்டும்.
தமிழ் தரப்பு டக்லஸ் நினைத்தாலோ சிறீதரன் நினைத்தாலோ அர்ச்சுனா நினைத்தாலோ அறிக்கை வீரர்களாக மட்டுமே இருக்க முடியும்.
மக்களே உங்கள் வாழ்வு உங்கள் முடிவில்தான் இருக்கிறது.
பின்னர் தேசியம் தேசிக்காய் எல்லாம் பின்னர் பார்க்கலாம்.
-SLV SWISS-
லங்கா4 (Lanka4)
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை