சினிமா
கல்லாகட்டும் புஷ்பா 2 கலெக்ஷன்ஸ்…! ப்ரீ புக்கிங் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

கல்லாகட்டும் புஷ்பா 2 கலெக்ஷன்ஸ்…! ப்ரீ புக்கிங் வசூல் எத்தனை கோடி தெரியுமா?
சினிமா ரசிகர்கள் அடுத்ததாக எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் புஷ்பா 2. பான் இந்தியன் திரைப்படமாக உருவாகியுள்ள புஷ்பா 2 பெரிய பஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ளார்.இந்த படத்தின் முதலாம் பாகம் 2021ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்தது. இதனால் இரண்டாம் பாகத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது. இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில், அனுஷ்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான புஷ்பா 2 ட்ரெய்லர் ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்பை பெற்றது. டிசம்பர் 5 திகதி திரைக்கு வரவிருக்கும் இந்த திரைப்படம் வெளிநாட்டு ப்ரீ புக்கிங் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. இதுவரையில் ரூ. 25 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.