உலகம்
ஜப்பானில் மின்னல் தாக்கத்தால் ஆறு மாணவர்கள் படுகாயம்!

ஜப்பானில் மின்னல் தாக்கத்தால் ஆறு மாணவர்கள் படுகாயம்!
ஜப்பானில் விளையாட்டு மைதானத்தில் மின்னல் தாக்கியதில் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்கு ஜப்பானின் கியோட்டோவிற்கு அருகிலுள்ள நாராவில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்கள் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதாக கூறப்படுகிறது.
மின்னல் தாக்கியதில் காயமடைந்த ஐந்து பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
திடீரென பெய்த மழைக்குப் பிறகு மின்னல் தாக்கியதாக குழு மேற்பார்வையாளர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லங்கா4 (Lanka4)
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை