Connect with us

இந்தியா

‘அலைபாயுதே’ பாணி: கல்யாணம் முடித்து விட்டு அவரவர் வீட்டில் வாழ்ந்த ப்ளஸ் ஒன் மாணவன், மாணவி!

Published

on

Loading

‘அலைபாயுதே’ பாணி: கல்யாணம் முடித்து விட்டு அவரவர் வீட்டில் வாழ்ந்த ப்ளஸ் ஒன் மாணவன், மாணவி!

சாத்தான்குளம் அருகே பிளஸ் 1 மாணவியை ரகசியமாக திருமணம் செய்த அதே வகுப்பு மாணவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவனும், 16 வயது மாணவியும் பிளஸ் 1 படித்து வந்துள்ளனர். மாணவனும், மாணவியும் வேறு சமுகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் காதலித்து வந்துள்ளனர்.

Advertisement

இவர்களின் காதல் படிப்படியாக வளர்ந்தது. டீன் ஏஜ் என்பதால், எந்த பின்விளைவுகளையும் பற்றி யோசிக்காமல் கல்யாணம் செய்ய முடிவு செய்துள்ளர். இந்த அறியா பருவ காதலுக்கு சில அறியா பருவ நண்பர்களும் உதவிக்கரமாக இருந்துள்ளனர்.

இதற்கிடையே, கடந்த மே மாதம் மாணவர்கள் பெற்றோர்களுக்கு தெரியாமல் ரகசியமாக நண்பர்கள் உதவியுடன் திருமணம் முடித்துள்ளனர். பின்னர் , எதுவும் நடக்காத போல வழக்கம் போல் பள்ளிக்கும் சென்று வந்துள்ளனர்.

ஆனால், மாணவ, மாணவியின் நடவடிக்கையில் மாற்றம் இருந்தது. இதையடுத்து, மாணவியை பெற்றோர் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, தன்னுடன் படித்த சக மாணவனை மாணவி திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. இதனால், பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

Advertisement

உடனடியாக, மாணவியின் பெற்றோர் சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் நாககுமாரி விசாரணை நடத்தி மாணவன் மீது வழக்கு பதிந்தார்.

மாணவியை தூத்துக்குடியில் உள்ள காப்பகத்தில் ஓப்படைத்தனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டது தெரியவந்ததும் மாணவன் தலைமறைவாகி விட்டார். மாணவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் சாத்தான்குளம் பள்ளி மாணவர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதுதொடர்பான அரசு அதிகாரிகள் பள்ளி பருவத்தில் அறியாமையாக காதலித்து திருமணம் செய்து கொள்ளும் நிலையை மாற்றிட அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்துள்ளனர்.

Advertisement

இதுதொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு கவுன்சிலிங் நடத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

அலைபாயுதே பட பாணியில் நடந்த இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன