விளையாட்டு
CSK vs KKR LIVE Score: திருப்பு முனையை ஏற்படுத்துவாரா தோனி? கொல்கத்தாவுடன் இன்று மோதல்

CSK vs KKR LIVE Score: திருப்பு முனையை ஏற்படுத்துவாரா தோனி? கொல்கத்தாவுடன் இன்று மோதல்
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் 25-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. ஆங்கிலத்தில் படிக்கவும்: CSK vs KKR LIVE Cricket Score, IPL 2025காயம் காரணமாக கேப்டன் ருதுராஜ் விலகியிருக்கும் நிலையில், அனைவரது கவனமும் புதிய கேப்டன் தோனி மீது இருக்கும். 4 தொடர் தோல்விகளைச் சந்தித்து துவண்டுள்ள சென்னை அணிக்கு அவர் திருப்பு முனையை ஏற்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதனால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.