சினிமா
“FIREWORKS..” ரெட்ரோ படத்தின் மூன்றாவது சிங்கிள் விரைவில்..! இயக்குநரின் x பதிவில் உறுதி..

“FIREWORKS..” ரெட்ரோ படத்தின் மூன்றாவது சிங்கிள் விரைவில்..! இயக்குநரின் x பதிவில் உறுதி..
பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் சமீப காலங்களாக வெளியாகிய எந்த ஒரு படமும் அதிக வசூலை கொடுக்கவில்லை கடந்த ஆண்டு பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகிய கங்குவா திரைப்படம் ஒரு சில விமர்சனங்களினால் தோல்வியை சந்தித்தது. இதனை தொடர்ந்து இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ ,rj பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 மற்றும் வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் போன்ற படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார்.மேலும் ரெட்ரோ படம் மே முதலாம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெட்ஜ் நடித்துள்ளார். 65 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப் படத்தினை சூர்யா ஜோதிகாவின் 2d நிறுவனம் தயாரித்துள்ளதுடன் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.மேலும் படத்தின் 2 பாடல்களும் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் வைரலாகி வருகின்றது இந்த நிலையில் படத்தின் 3 சிங்கிள் நாளை வெளியாகும் என தனது x தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இப் பாடலினை விவேக் எழுதியுள்ளதுடன் சித்ஸ்ரீராம் பாடியுள்ளார்.