சினிமா
“குட் பேட் அக்லி ” வசூலில் திடீர் திருப்பம்…! 2 நாட்களில் இத்தனை கோடியா..?

“குட் பேட் அக்லி ” வசூலில் திடீர் திருப்பம்…! 2 நாட்களில் இத்தனை கோடியா..?
கடந்த 10ம் தேதி வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் வசூல் வேட்டையை தொடர்ந்து முன்னேறி வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்தார்.இந்தப் படத்தில் த்ரிஷா கதாநாயகியாக, அர்ஜுன் தாஸ் வில்லனாக நடித்திருந்தார். மேலும் சுனில், பிரசன்னா, பிரியா வாரியர், பிரபு என பல பிரபல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப் படத்தில் தல அஜித் இப் படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். கேமியோ ரோலில் ஷாலினி நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. அதன் விளைவாக 2 நாட்களில் குட் பேட் அக்லி திரைப்படம் உலகளவில் ரூ. 90 கோடி வசூல் செய்துள்ளது என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. குட் பேட் அக்லி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.