வணிகம்
தங்க பத்திரத்தில் முதலீடு: இப்போது பாதுகாப்பானதா? நிபுணர்கள் சொல்வது என்ன?

தங்க பத்திரத்தில் முதலீடு: இப்போது பாதுகாப்பானதா? நிபுணர்கள் சொல்வது என்ன?
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தங்க இறக்குமதியை குறைக்கும் நோக்கில், தங்கத்தை உலோகமாக வாங்குவதற்கு பதிலாக பத்திரங்களாக மக்களை வாங்க செய்தால் இறக்குமதியை குறைக்கலாமே என்ற எண்ணத்தில், 2015-ல் தங்க பத்திர திட்டத்தை கொண்டு வந்தது. மக்கள் தங்க நாணயங்கள் மற்றும் நகைகளாக வாங்குவதற்கு பதிலாக தங்க பத்திரங்களில் முதலீடு செய்ய மக்களை ஊக்குவித்தது.மேலும் ஆண்டுக்கு 2.75% வட்டி கொடுப்பதாகவும் மத்திய அரசு அறிவித்தது. இதனால் தங்க பத்திரங்கள் திட்டத்துக்கு மக்கள் பலத்த வரவேற்பு கொடுத்தனர். அதேசமயம், மக்கள் தங்க நகைகள், நாணயங்களை வாங்குவதை தொடர்ந்தனர். இதனால் தங்க பத்திரங்கள் திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் ஆனபிறகும், இறக்குமதியை குறைப்பது என்ற அதன் முக்கிய நோக்கத்தை எட்ட முடியவில்லை. நம் நாடு இன்னும் உலகின் முன்னணி தங்க இறக்குமதியாளர்களில ஒருவராகதான் உள்ளது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்இதுவரை மத்திய அரசு மொத்தம் 147 டன் தங்கத்துக்கு சமமான தங்க பத்திரங்களை 67 முறை வெளியிட்டுள்ளது. தற்போது அரசாங்கத்தின் பொறுப்புகள் 132 டன்னை எட்டியுள்ளது. தங்க பத்திர திட்டம் காகிதத்தில் நன்றாக தெரிந்தது, ஆனால் உண்மையில் அது அரசாங்கத்துக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் திட்டமாக மாறி விட்டது. அதேசமயம் தங்க பத்திரத்தில் முதலீடு செய்தவர்கள் 3 மடங்குக்கும் அதிகமான வருமானத்தை பெற்றனர். இதனால் அரசாங்கத்தின் நிதி நிலை மோசமடைந்தது.இதற்கு மேல் இந்த திட்டத்தை தொடர்ந்தால் பெரிய ஆபத்தாக முடியும் என்பதை உணர்ந்த மத்திய அரசு, தங்க பத்திர திட்டத்தை கடந்த நிதியாண்டில் சத்தமில்லாமல் நிறுத்தியது. இதனால் தங்க பத்திரங்களில் முதலீடு செய்தவர்கள் மத்தியில் தங்களது முதலீடு குறித்து அச்சம் ஏற்பட்டது. தங்க பத்திர திட்டத்தில் தங்கள் முதலீடு பாதுகாப்பானதா? முதிர்வு அடைந்தவுடன் வாக்குறுதி அளித்தப்படி மத்திய அரசு பணத்தை திரும்ப வழங்குமா என்ற சந்தேகம் பலருக்கு எழுந்தது. ஆனால் அது குறித்து கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக பாதுகாப்பு கவலைகள் குறித்து, 1 Finance-இன் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கேவல் பானுஷாலி கூறுகையில்,2015-ம் ஆண்டு தங்க பத்திர திட்டம் தொடங்கப்பட்டலிருந்து தங்கத்தின் விலை 250% அதிகமாக அதிகரித்து 1 கிராம் ரூ.9,300-ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய விலையில், நிலுவையில் உள்ள அனைத்து தங்க பத்திரங்களும் மீட்கப்பட்டால், அரசு ரூ.1.2 லட்சம் கோடிக்கு மேல் செலுத்த வேண்டியிருக்கும். இந்த தொகையை கேட்டவுடன் பெரிதாக தெரியலாம் ஆனால் மத்திய அரசின் மொத்த கடன் பொறுப்புகள் மற்றும் ஆண்டு பட்ஜெட்டுடன் ஒப்பிடும்போது, இது மிகக் குறைவு. 2025 மார்ச் 31 நிலவரப்படி, மத்திய அரசின் கடன் ரூ.181.74 லட்சம் கோடியாகும். இதில், ரூ.1.20 லட்சம் கோடி தங்க பத்திரம் பொறுப்பு மிகவும் சிறியது.தங்க பத்திரங்கள் ஒரு இறையாண்மை உத்தரவாதத்தை கொண்டுள்ளன. எனவே அரசு தனது உறுதிமொழிகளை நிறைவேற்ற வரிகள் (அ) கடன் வாங்குதல் மூலம் தேவையான நிதியை திரட்டி அளிக்க முடியும். இதுதவிர இந்திய ரிசர்வ் வங்கி மூலோபாய அடிப்படையில் 321 டன் தங்கத்தை வாங்கி குவித்து உள்ளது. இது 2,000 கோடி டாலர் லாபத்தை ஈட்டுகிறது. மேலும் பொறுப்புகளை குறைக்கிறது.இதுவரை அரசாங்கம் 7 தவணை பத்திரங்களை முழுமையாக திருப்பி செலுத்தியுள்ளது. மேலும், 8-வது தவணைக்கான முன்கூட்டியே மீட்பையும் வழங்கியுள்ளது.தங்க பத்திரங்கள் தற்போதைய சந்தை விலையில் மீட்கப்படுகின்றன. மத்திய அரசு இந்த பத்திரங்களின் பொறுப்பை தீவிரமாக எடுத்துக் கொள்கிறது மற்றும் சரியான நேரத்தில் பணம் செலுத்துகிறது என்பதை இது தெளிவுப்படுத்துகிறது.இதுதவிர, வளர்ந்து வரும் பொறுப்பை சமநிலைப்படுத்த அரசாங்கம் ஒரு தங்க இருப்பு நிதியையும் (ஜிஆர்எஃப்) உருவாக்கியுள்ளது. 2023-24ம் நிதியாண்டில் இந்த நிதியில் ரூ.3,552 கோடி டெபாசிட் செய்யப்பட்டது. இது 2024-25ம் நிதியாண்டில் திருத்தப்பட்ட மததிய படஜெட்டில் ரூ.28,605 கோடியாக உயர்ந்துள்ளது. சாத்தியமான மீட்புக்கு அரசாங்கம் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதை தெளிவுப்படுத்துகிறது.அதேசமயம், அனைத்து பத்திரங்களும் ஒரே நேரத்தில் திரும்ப பெறப்படாது, கடைசி தவணை தங்க பத்திரங்களின் முதிர்வு காலம் 2032ல் தான் வருகிறது. எனவே அரசாங்கம் மொத்த தொகையை செலுத்த வேண்டியதில்லை. இது பணம் செலுத்துவதைத் திட்டமிட போதுமான நேரத்தை வழங்கும். அதேசமயம், தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்றால், அரசாங்கத்தின் பொறுப்பு மேலும் அதிகரிக்கக்கூடும்.இருப்பினும், 2029-ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார பலத்தை 5 லட்சம் கோடி டாலராக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும் இந்திய பத்திர சந்தை சுமார் 2.7 லட்சம் கோடி டாலர் மதிப்புடையது, மேலும் கார்ப்பரேட் பத்திரஙகளின் அளவு 60.000 கோடி டாலர்கள எட்டியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், தங்க பத்திரம் போன்ற வரையறுக்கப்பட்ட கடன்கள் நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.இந்திய அரசின் பணம் செலுத்தும் பதிவு நம்பகமானது, நிதி அமைப்பு வலுவானது மற்றும் தங்க இருப்பு நிதி போன்ற நடவடிக்கைகள் ஆபத்தை சமன் செய்கின்றன. நீங்கள் தங்க பத்திர திட்டத்தில் முதலீட்டாளராக இருந்தால், தற்போதைய சூழ்நிலையை பொறுத்தவரை உங்கள் மூலதனத்தை பற்றி தற்போது எள்ளவும் கவலைப்பட தேவையில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.