Connect with us

பொழுதுபோக்கு

லோகேஷ் கனராஜ் பட ஹீரோவா இவர்? அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகர்; யார்னு தெரியுதா பாருங்க!

Published

on

Actor Sree Photos

Loading

லோகேஷ் கனராஜ் பட ஹீரோவா இவர்? அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகர்; யார்னு தெரியுதா பாருங்க!

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் பிரலமான நடிகராக இருக்கும் வழக்கு எண் பட ஹீரோ நடிகர் ஸ்ரீ, தற்போது தோற்றம் மாறி ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான வழக்கு எண் 18/9 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீ (ஸ்ரீராம் நடராஜன்). இந்த படம் பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்து, மிஷ்கின் இயக்கத்தில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சோன் பப்டி, வில் அம்பு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த இவர், லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகமான மாநகரம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.A post shared by Shriram Natarajan (@shri_blueticked)மாநகரம் 2017-ம் ஆண்டு வெளியான நிலையில், அதன்பிறகு எந்த படத்திலும் நடிக்காத ஸ்ரீ, 2024-ம் ஆண்டு இறுகப்பற்று என்ற படத்தில் 3 ஹீரோக்களில் ஒருவராக நடித்திருந்தார். இந்த படமும் விமர்சனரீதியாக பாராட்டுக்களை பெற்றிருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியராள பங்கேற்று 4-வது நாளில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஸ்ரீ, தேர்வு செய்த படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதைக்களம் தான் என்றாலும், அவர் அதிகமான படங்கள் கமிட் ஆகவில்லை.A post shared by Shriram Natarajan (@shri_blueticked)சமூகவலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டீவாக இருக்கும் நடிகர் ஸ்ரீ அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், அரைகுறை ஆடையுடன், தலைமுடியை கலரிங் செய்து, எலும்புகள் தெரியும் அளவிற்கு உடல் மெலிந்து, காணப்படுகிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள நிலையில், உங்களுக்கு என்னதான் ஆச்சு என்று கேட்டு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.A post shared by Shriram Natarajan (@shri_blueticked)அதில் ஒருவர் உங்களை தனிமைப்படுத்திக்கொள்ளாததீர்கள், உங்களது திரையுலக நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் மீண்டும் இணைய முயற்சி செய்யுங்கள். நீங்கள் தனியாக இல்லை என்பதை உணருங்கள் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுகள் வைரலாகி வரும் நிலையில், பலரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜூவை டேக் செய்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன