சினிமா
விஜய் ரசிகர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி..! ரீ- ரிலீஸாகும் சூப்பர் ஹிட் திரைப்படம்..!

விஜய் ரசிகர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி..! ரீ- ரிலீஸாகும் சூப்பர் ஹிட் திரைப்படம்..!
2005ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியான ‘சச்சின்’ திரைப்படம், தனது நேர்த்தியான கதையழகு, விஜய் மற்றும் ஜெனிலியாவின் கியூட்டான நடிப்பு என்பன மூலம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் இயக்கியிருந்தார். தயாரிப்பாளராக கலைப்புலி எஸ். தாணு காணப்பட்டதுடன் வடிவேலு மற்றும் சந்தானம் ஆகியவர்களின் நடிப்பு என்பன பல ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தன.’சச்சின்’ படம் வெளியாகி 20 ஆண்டுகள் முடிகின்ற இந்த சிறப்பான தருணத்தில், தயாரிப்பாளர் தாணு படத்தை டிஜிட்டல் முறையில் புதுப்பித்து திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். மேலும், “சச்சின் படம் ரசிகர்களின் மனதிற்கு சிறந்த நினைவுகளைக் கொடுத்திருந்தது. அத்தகைய படத்தினை புதிய தலைமுறைக்கு வழங்குவதற்காகவே ரீ- ரிலீஸ் செய்வதாகவும்” கூறியிருந்தார். அத்துடன் ” சச்சின்” படத்தின் டிரெயிலரை நாளை வெளியிடுவதற்கு படக்குழு தீர்மானித்ததுடன் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக படத்தினை ஏப்ரல் மாதம் 18ம் திகதி வெளியிடவுள்ளனர். இது விஜய் ரசிகர்களுக்கு மிகவும் சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது.