இந்தியா
ஓ.பி.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு 51% ஆக உயர்த்தணும்… கர்நாடக அரசுக்கு ஆணையம் பரிந்துரை!

ஓ.பி.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு 51% ஆக உயர்த்தணும்… கர்நாடக அரசுக்கு ஆணையம் பரிந்துரை!
கர்நாடக மாநிலத்தில் கடந்த 2020-ம் ஆண்டு அப்போது ஆட்சியில் இருந்த பா.ஜ.க. சாதி வாரி கணக்கெடுப்பு ஆணைய தலைவராக ஜெயபிரகாஷ் ஹெக்டேவை நியமித்து, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு ரூ.160 கோடி செலவில் நடத்தப்பட்டது.இடஒதுக்கீட்டை அதிகரிக்க பரிந்துரை: அந்த அறிக்கையை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மாநில முதல்வர் சித்தராமையாவிடம் ஆணைய தலைவர் ஜெயபிரகாஷ் ஹெக்டே வழங்கி இருந்தார். அந்த அறிக்கையானது நேற்று முன்தினம் கர்நாடக அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து 17-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் விரிவாக ஆலோசனை செய்யப்பட உள்ளது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்இதற்கிடையே, சாதி வாரி கணக்கெடுப்பு நடத்திய ஜெயபிரகாஷ் ஹெக்டே தலைமையிலான ஆணையம் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்கவும் பரிந்துரை செய்து இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. பிற்படுத்தப்பட்டோருக்கு தமிழகம் மற்றும் ஜார்க்கண்ட் முறையே 69 மற்றும் 77% இடஒதுக்கீட்டை வழங்குவதை மேற்கோள் காட்டி, கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கான 32% இடஒதுக்கீட்டை 51%ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைத்துள்ளது. கணக்கெடுப்பு அறிக்கையின்படி, 1ஏ பிரிவில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் மக்கள் தொகை 34,96,638, 1பி பிரிவில் 73,92,313, 2ஏ – 77,78,209, 2பி – 75,25,880, 3ஏ – 72,99,577 மற்றும் 3 பி பிரிவில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் மக்கள் தொகை 1,54,37,113 ஆகும்.இதன் மூலம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மொத்த மக்கள் தொகை 4,16,30,153 ஆகும். பட்டியலினத்தவர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மக்கள் தொகை முறையே 1,09,29347 மற்றும் 42,81,289 ஆக உள்ளது. மாதிரி கணக்கெடுப்பில் 5,98,14,942 மக்கள் உள்ளனர். இந்த கணக்கெடுப்பு ஆரம்பத்தில் 2015 இல் எச்.காந்தராஜ் என்பவரால் நியமிக்கப்பட்டது. பின்னர் கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் கே.ஜெயபிரகாஷ் ஹெக்டே அதை முடித்து 2024 பிப்ரவரியில் முதலமைச்சர் சித்தராமையாவிடம் அறிக்கையை சமர்ப்பித்தார்.