பொழுதுபோக்கு
கல்லூரி மாணவியாக இருந்தபோது… மீரா ஜாஸ்மின் குறித்து நயன் ஓபன் டாக்!

கல்லூரி மாணவியாக இருந்தபோது… மீரா ஜாஸ்மின் குறித்து நயன் ஓபன் டாக்!
மலையாள சினிமா முழுவதும் ஆண் நட்சத்திரங்களின் ஆதிக்கம் இருக்கும் காலத்தில், மஞ்சு வாரியர் மற்றும் சம்யுக்தா வர்மாவின் திருமணங்கள் மற்றும் அதை தொடர்ந்து ஏற்பட்ட இடைவெளிக்குப் பிறகு, சத்தமில்லாமல் மீண்டும் சினிமாவில் மீராஜாஸ்மீன் நடிக்க தொடங்கியுள்ளார்.பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான ஏ.கே.லோகிததாஸ் இயக்கிய தனது முதல் திரைப்படமான சூத்ராதரன் (2001) படத்தில் அறிமுகமான மீரா ஜாஸ்மின் தனது நடிப்பால் சினிமா ரசிகர்களின் இதயங்களை வென்றாலும், அவர் நட்சத்திர அந்தஸ்துக்கு முன்னேறியது விண்கல் போன்றது. மேலும், அவர் தென்னிந்தியாவின் பிரியமான பெண் கதாநாயகி ஆனார். சத்யன் அந்திக்காட்டின் மனசினக்கரே (2003) படத்தில் நயன்தாரா அறிமுகமான நேரத்தில், மீரா ஜாஸ்மின் மலையாளம் மற்றும் தமிழ் என 2 மொழிகளிலும் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். அடுத்தடுத்து பிளாக்பஸ்டர்கள் மற்றும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கொண்டிருந்தார்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்பெண் கதாபாத்திரங்கள் மீரா ஜாஸ்மினுக்காகவே எழுதப்பட்டது. மலையாள சினிமாவின் எழுச்சியாகவே பார்க்கப்பட்டது. மேலும் அவர் ஒவ்வொரு முறையும் நடிகையாக தனது திறமையை வெளிப்படுத்தினார். சமீபத்தில், 2000-களில் மீரா ஜாஸ்மின் உச்சபட்ச நடிகையாக இருந்தார் என்பதையும், புதுமுக நடிகைகளை அவரை எப்படிப் பாராட்டினர் என்பதையும் நயன்தாரா பகிர்ந்து கொண்டார். மீராவும் நயன்தாராவும் கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள திருவல்லா என்ற ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள்.மீரா ஜாஸ்மின் குறித்து நயன்தாரா பகிர்ந்து கொண்டவை:“நான் படித்த கல்லூரியில்தான் மீரா ஜாஸ்மின் படித்தாங்க. அங்கே, எனக்கு முதல் பெஞ்சில் மீராவின் உறவினர் ஒரு பெண் இருந்தாள். என்னுடன் வந்து உட்காருவாள், அவள் எப்போதும் ‘மீராவின் உறவினர்’ என்று சொல்வாள். ஒவ்வொரு நாளும் அவள், ‘ஓ, மீரா இங்கே இல்லை. அவள் சுவிட்சர்லாந்தில் இருக்கிறாள். பாடலுக்காக சென்றுள்ளார் என்று சொல்வாள். அதனால், மீரா என்ற பெயர் எப்போதும் என் காதுகளில் ஒலித்து கொண்டே இருக்கும். அவளைப் பற்றி ஒவ்வொரு நாளும் கேட்பேன். நான் எப்போதும் அவளை பிரமிப்புடன் காண்கிறேன்” என்று நெட்ஃபிக்ஸ் இந்தியா ஏற்பாடு செய்த டெஸ்ட் பட விளம்பர நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா கூறினார்.எஸ். சசிகாந்த் இயக்கத்தில் நடிகர் ஆர். மாதவன், நயன்தாரா, சித்தார்த் மற்றும் மீரா ஜாஸ்மின் போன்ற நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள டெஸ்ட் திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் நேரடியாக வெளியிட்டுள்ளது. நடிகர்கள் மாதவன், நயன்தாரா, முதன்முறையாக சேர்ந்து நடித்துள்ள அதேநேரத்தில், மீரா ஜாஸ்மின் நீண்ட இடைவெளிக்கு பிறகு, தமிழ் சினிமாவுக்கு திரும்பி வந்துள்ளார். நயன்தாராவுடன் மீரா ஜாஸ்மின் இணைந்து நடித்த முதல் திரைப்படமாகும். இதற்கு முன்பு மீராவை அவர் ஒருபோதும் சந்தித்ததில்லை, இதனால், இந்தப் படம் நயனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்தது. தனது அன்புக்குரிய நடிகையுடன் திரையைப் பகிர்ந்து கொள்ள முடிந்தது என்றார்.