Connect with us

இலங்கை

விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி மாநாட்டில் 3 வெண்கலப்பதக்கங்களை சுவீகரித்தது இலங்கை

Published

on

Loading

விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி மாநாட்டில் 3 வெண்கலப்பதக்கங்களை சுவீகரித்தது இலங்கை

தாய்லாந்து சர்வதேச இளம் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி மாநாட்டில் நடைபெற்ற போட்டிகளில் இலங்கை அணியினர் 44 நாடுகளுடன் போட்டியிட்டு 3 வெண்கலப் பதக்கங்களை வெற்றி பெற்றனர்.

தாய்லாந்தில் கடந்த 5 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை சர்வதேச இளம் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றது.

Advertisement

இதன் போது நடைபெற்ற போட்டி நிகழ்வுகளில் மட்/பட்டிருப்பு தேசியப் பாடசாலை இரசாயனவியல் ஆசிரியர் செல்வராஜா தேவகுமார் தலைமையில் இலங்கை அணியினர் பங்குபற்றினார்கள்.

இலங்கை அணியில் பிரபலப் பாடசாலைகளைச் சேர்ந்த 6 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

சர்வதேச ஆராய்ச்சிக் குழு, செல்வராஜா தேவகுமார் ஆசிரியரை அங்கு நடைபெற்ற பல்வேறு போட்டி நிகழ்வுகளுக்கு நடுவராகப் பணியாற்றவும் அழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன