இலங்கை
உயர்தர பரீட்சை பெறுபேறு 20க்கு பின்னர் வெளியாகும்!

உயர்தர பரீட்சை பெறுபேறு 20க்கு பின்னர் வெளியாகும்!
க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 20 ஆம் திகதிக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆயினும் பல நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் 20ஆம் திகதிக்குப் பின்னரே வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவிததுள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் 3 லட்சத்து 33 ஆயிரத்து 185 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.