சினிமா
டி.ராஜேந்தர் அப்படிப்பட்டவர் தான்! நம்மை மீறி நடக்காது.. நடிகை நளினி ஓபன் டாக்

டி.ராஜேந்தர் அப்படிப்பட்டவர் தான்! நம்மை மீறி நடக்காது.. நடிகை நளினி ஓபன் டாக்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்களில் ஒருவர் நடிகை நளினி. 1980ம் ஆண்டு திரைக்கு வந்த ஒத்தையடி பாதையிலே என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.ஆரம்பத்தில் சில படங்கள் நடித்தவர் அதன்பிறகு நிற்கவே நேரம் இல்லாமல் படு பிஸியாக நடித்து வந்தார், அதிகப்படியான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்தார்.தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஏராளமான படங்கள் நடித்தவர் இப்போது வெள்ளித்திரை, சின்னத்திரை என தொடர்ந்து நடித்து வருகிறார்.இந்நிலையில், பேட்டி ஒன்றில் நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் குறித்து நளினி பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.அதில், ” என்னுடன் பணியாற்றிய அனைத்து நடிகர்களும் ஜென்டில்மேன் தான். அதில் குறிப்பாக டி.ஆர். சார். அவர் மீது என் மூச்சுக்காற்று பட்டால்கூட அம்மா மூச்சை அடக்கி வைத்துக்கொள் என் கையில் படுகிறது என தெரிவிப்பார்.அப்படிப்பட்ட மனிதர் தான் ராஜேந்தர். தற்போது பெண்கள் மிகவும் தைரியமாக உள்ளனர். நம்மை மீறி யாராலும் தொடமுடியாது” என்று தெரிவித்துள்ளார்.