Connect with us

இலங்கை

மகனுக்கு எமனான லொரி ; தந்தை கண்முன்னே நினைத்து கூட பார்க்க முடியாத கோரம்

Published

on

Loading

மகனுக்கு எமனான லொரி ; தந்தை கண்முன்னே நினைத்து கூட பார்க்க முடியாத கோரம்

பலாங்கொடை பகுதியில்  லொரியின்  சக்கரத்தில் நசுங்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

 பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருக்மல்கந்துர பகுதியில்  வீட்டின் முன் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை ஸ்டார்ட் செய்துவிட்டு, பின்னோக்கிச்  செலுத்தும் போது, ​​வீட்டில் இருந்த ஒரு சிறுவன் லொரியின் இடது பின்புற சக்கரத்தின் கீழ் நசுங்கி உயிரிழந்துள்ளார்.

Advertisement

விபத்தில் பலத்த காயமடைந்த சிறுவன் பலாங்கொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த குழந்தை, 1 வயது மற்றும் 7 மாத வயதுடையவர் என்பதுடன்  பலாங்கொடையைச் சேர்ந்த லாரி ஓட்டுநரின் மகன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கு காரணமான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன