Connect with us

பொழுதுபோக்கு

எளிமையும், கம்பீரமும் தான் இவருக்கு பிடித்ததாம்: எதிர்நீச்சல் நடிகை யார்னு பாருங்க!

Published

on

Ethirne kanh

Loading

எளிமையும், கம்பீரமும் தான் இவருக்கு பிடித்ததாம்: எதிர்நீச்சல் நடிகை யார்னு பாருங்க!

மதுரையில் பிறந்த கனிகா திவ்யா வெங்கடசுப்பிரமணியம் என்ற இயற்பெயர் கொண்டவர். மதுரையில் பிரபலமான பள்ளியொன்றில் படித்த கனிகா, மாநில அளவிலான கல்விக்கான விருதினைப் பெற்றுள்ளார்.ராஜஸ்தானில் உள்ள பிர்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் இயந்திரவியல் படித்த கனிகா பல இசைப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.சென்னையில் நடைபெற்ற மிஸ் சென்னை என்ற போட்டியே இவர் திரைத்துறைக்கு வரக் காரணமாக இருந்தது. தமிழ் திரைப்படங்களைவிட மலையாளத்தில் அதிகம் நடித்துள்ளார்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் நடிகையாக வலம் வரும் கனிகா சீரியல்களிலும் நடித்து வருகிறார்.சசி கணேசன் இயக்கத்தில் வெளியான ஃபைவ் ஸ்டார் படத்தில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் அறிமுகமானா இவர், அஜித்தின் வரலாறு படத்தில் காயத்ரி என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.சேரனின் ஆட்டோகிராப் படத்தில் தேன்மொழி என்ற கேரக்டரில் படத்தின் இறுதிக்கட்சியில் வந்தாலும், ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்திருந்தார்.நடிகை கனிகாவுக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் அதிக ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர். அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக், கம்மெண்ட் செய்து பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன