இலங்கை
யாழில் ஜனாதிபதியின் புதுவருட உரையை சிறப்பாக ஆற்றிய சிறுவன்!

யாழில் ஜனாதிபதியின் புதுவருட உரையை சிறப்பாக ஆற்றிய சிறுவன்!
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்று இடம்பெற்ற புதுவருட கொண்டாட்ட நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதன்போது, யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் தரம் மூன்றில் கல்வி பயிலும் சுதர்சன் அருணன் என்ற மாணவன் ஜனாதிபதியின் புதுவருட வாழ்த்து செய்தியை சிங்களத்தில் ஆற்றினார்.
இந்த கொண்டாட்டத்தில் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால, பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என் பலரும் கலந்துகொண்டனர்.