இலங்கை
IPL ஒளிபரப்பு பிரிவில் புதிய ரோபோ

IPL ஒளிபரப்பு பிரிவில் புதிய ரோபோ
இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் ஒளிபரப்புப் பிரிவில் புதிய சேர்க்கையாக நான்கு கால் கொண்ட ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
காணொளி ஒன்றின் மூலம் இந்தியன் ப்ரீமியர் லீக் நிர்வாகம் இந்த ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ரோபோவில் கண்காணிப்பு மற்றும் ஒளிபரப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இது முற்றிலும் புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை குறித்த ரோபோவிற்கு பெயர் ஒன்றைப் பரிந்துரை செய்யுமாறு இந்தியன் ப்ரீமியர் லீக் நிர்வாகம் ரசிகர்களைக் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.