Connect with us

பொழுதுபோக்கு

சங்கிலி எடுங்க, அப்புறம் வரேன்: படப்பிடிப்புக்கு வராமல் வெளியேறிய என்.எஸ்.கே; என்ன நடந்தது?

Published

on

NSK Mkj

Loading

சங்கிலி எடுங்க, அப்புறம் வரேன்: படப்பிடிப்புக்கு வராமல் வெளியேறிய என்.எஸ்.கே; என்ன நடந்தது?

காமெடியில் சமூக சீர்திருத்த கருத்துகளை கூறி கலைவாணர் என்ற பட்டத்துடன் வலம் வந்த என்.எஸ்.கிருஷ்ணன், ஜெமினி ஸ்டூடியோவில் அமல்படுத்தப்பட்ட ஒரு விதியை நீக்க ஒரு தந்திரமான முயற்சியை மேற்கொண்டுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.க்ளாசிக் சினிமாவில் சிறந்த காமெடி நடிகர் பாடகர் என்று தனக்கென தனி அடையாளத்தை பெற்றவர் என்.எஸ்.கிருஷ்ணன். 1908-ம் ஆண்டு நவம்பர் 29-ந் தேதி நாகர்கோவிலில் பிறந்த இவர், 1935-ம் ஆண்டு வெளியான மேனகா என்ற படத்தின் மூலம் திரைத்துறையிவல் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரின் அறிமுக திரைப்படமான சதிலீலாவதி படத்தில் நடித்திருந்தார்.முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். மேலும் தனது நகைச்சுவை மூலம் சமூகத்திற்கு தேவையாக கருத்துக்களை வைத்து அசத்தியவர். கலைவாணர் என்ற பட்டத்துடன் வலம் வந்த என்.எஸ்.கிருஷ்ணன்,  நகைச்சுவை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்தாமல் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர்.அதேபோல் சக நடிகர் நடிகைகளுடன் அன்பாகவும், நட்புடனும் பழகும் வழக்கத்தை வைத்திருந்த என்.எஸ்.கிருஷ்ணன், சினிமாவில் பல பஞ்சாயத்துகளை தீர்த்து வைக்கும் அளவுக்கு பிரபலமான இருந்துள்ளார். 1941-ம் ஆண்டு வெளியான மதனகாமராஜன் என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் அடியெடுத்து வைத்த ஜெமினி நிறுவனம் பல படங்களை தயாரித்துள்ளது.ஜெமினி ஸ்டூடியோவில் நடிகராக இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும், நேரடியாக ஸ்டூடியோவுக்க காரில் சென்றவிட முடியாது. அந்த ஸ்டூடியோவின் நுழைவு வாயிலில் ஒரு சங்கிலி கட்டப்பட்டிருக்கும். அங்கேயே காரை நிறுத்திவிட்டு ஸ்டூடியோவுக்கு உள்ளே நடந்து தான் செல்ல வேண்டும். இதனிடையே ஜெமினி நிறுவனம் தயாரிப்பில் 1943-ம் ஆண்டு மங்கம்மா சபதம் என்ற வசுந்தரா, ராஜன். டி.ஏ.மதுரம் ஆகியோருடன் என்.எஸ்.கிருஷ்ணன் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.படப்பிடிப்புக்காக என்.எஸ்.கிருஷ்ணன், காரில் வந்தபோது, ஜெமினி ஸ்டூடியோவின் காவலாளி அவரை தடுத்து நிறுத்தி இந்த காரை இங்கு விட்டுவிட்டு உள்ளே நடந்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார். ஏன் என்று என்.எஸ்.கிருஷ்ணன் கேட்க, இது முதலாளி உத்தரவு என்று கூறியுள்ளார். இதை கேட்ட என்.எஸ்.கிருஷணன், இந்த சங்கிலியை எடுத்தால் தான் நான் இந்த படத்தில் நடிக்க வருவேன் என்று முதலாளியிடம் சொல்லிவிடுங்கள் என்று சொல்லிவிட்டு காரை எடுத்து புறப்பட்டு சென்றுள்ளார்.இந்த தகவல் உடனடியாக ஜெமினி ஸ்டூடியோ அதிபர் எஸ்.எஸ்.வாசனுக்கு செல்ல, அதிர்ச்சியான அவர், உடனடியாக தனது முடிவை மாற்றிக்கொண்டு, அங்கு சங்கிலி போடுவதை நிறுத்திக்கொண்டு அனைவரும் காரில் உள்ளே வர அனுமதித்துள்ளார். அதன்பிறகு படப்பிடிப்பில் கலந்துகொண்ட என்.எஸ்.கிருஷ்ணன் அந்த படத்தில் நடித்து முடித்தார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன