தொழில்நுட்பம்
வெளுத்து வாங்கும் கனமழை… நம்ம ஊர்ல மழையை எப்படி அளப்பாங்கனு தெரியுமா?

வெளுத்து வாங்கும் கனமழை… நம்ம ஊர்ல மழையை எப்படி அளப்பாங்கனு தெரியுமா?
வங்கிக் கடலில் ஃபீஞ்சல் புயல் உருவாகி உள்ளது. இந்தப் புயல் இன்று (நவ.30) மரக்காணம்- மாமல்லபுரம் இடையே கரையை கடக்க கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. எவ்வளவு மழை பதிவாகி உள்ளது. மழை எச்சரிக்கை உள்ளிட்ட நிலவரங்களை வானிலை மையம் முன்கூட்டியே கணித்து கூறும். அதன் பின் எவ்வளவு மழை பதிவாகி இருந்தது என்பதையும் மி.மீ, செ.மீ அளவில் வானிலை மையம் கூறும். மழை அளவு எவ்வாறு கணிக்கப்படுகிறது என்பது பற்றி பார்ப்போம். எவ்வளவு மழை பதிவாகி உள்ளது என்பதை அறிய நிறைய வகையான அளவுருக்கள் இருந்தாலும் நம் ஊரில் Standard Rain Gauge முறை தான் பயன்படுத்தப்படுகிறது. அதாவது அதிக இடையூறு இல்லாமல் மழை பொழியும் இடத்தில் இந்த கருவி வைக்கப்படுகிறது. அதற்குள் அளவுகள் உள்ளிடப்பட்ட ஃபானல் இருக்கும். அதில் மழை நீர் சேகரிக்கப்படும். எவ்வளவு மழை நீர் சேகரிக்கப்பட்டுள்ளது என்பது மி.மீ அளவில் காண்பிக்கப்படும். அதை வைத்து அந்த ஏரியா அல்லது ஊரில் எவ்வளவு மழை பதிவாகி உள்ளது என்று சொல்லப்படும். 1 மி.மீ மழை சேகரிக்கப்பட்டிருந்தால் அது நிலத்தோட அளவில் 1 சதுர மீட்டருக்கு 1 லிட்டர் மழை பாதிவாகி உள்ளது என்று சொல்லப்படுகிறது.மழையை எப்படி அளப்பாங்கனு தெரியுமா?!🧐#Inscoop #CycloneFengal #WeatherUpdate #facts pic.twitter.com/ka7YwtQwCkஅதாவது 10 மி.மீ என்றால் 1 சதுர மீட்டரில் 10 லிட்டர் மழை பெய்துள்ளது என்று அர்த்தம். Rain Gauge-ல் மி.மீட்டரில் மழை அளவு பதிவாகும். அதை சென்டி மீட்டராக சொல்ல வேண்டும் என்றால் Rain Gauge-ல் 10 மி.மீட்டர் அளவை தாண்டினால் 1 செ.மீ என்று கணக்கிடப்படும். இந்த அளவீடுகள் 24 மணி நேரத்திற்கு மட்டும் தான் சொல்ல முடியும். அடுத்த மணி நேரத்திற்கு சொல்ல இந்த கருவியில் உள்ள ஃபானனில் உள்ள தண்ணீரை காலி செய்து அளவெடுத்து தான் சொல்ல முடியும்.