இலங்கை
இந்த ஆண்டு 778,843 சுற்றுலாவிகள்!

இந்த ஆண்டு 778,843 சுற்றுலாவிகள்!
ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 9ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் 7 லட்சத்து 78 ஆயிரத்து 843 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர் என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்ததாவது:
ஏப்ரல் மாதத்தின் முதல் 9 நாள்களில் மட்டும் 56 ஆயிரத்து 567 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 9ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் 7 லட்சத்து 78 ஆயிரத்து 843 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர். இவர்களில் அதிகளவான சுற்றுலா பயணிகள் இந்தியாவில் இருந்து வந்துள்ளனர். இந்தியாவில் இருந்து ஒரு வட்சத்து 28 ஆயிரத்து 910 பேர் இலங்கைக்கு வந்துள்ளனர்.
அதேநேரம், ரஷ்யாவிலிருந்து 99 ஆயிரத்து 731 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 77 ஆயிரத்து 384 சுற்றுலாப் பயணிகளும், ஜேர்மனியிலிருந்து 53 ஆயிரத்து 920 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 41 ஆயிரத்து 478 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 46 ஆயிரத்து 289 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 31 ஆயிரத்து 390 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வந்துள்ளனர் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.