நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 15/04/2025 | Edited on 15/04/2025

காப்பி புரொடைக்‌ஷன் தயாரிப்பில், தாமஸ் செபாஸ்டியன் இயக்கத்தில், திலீப் போத்தன் மற்றும் தேவதர்ஷினி நடிப்பில் உருவாகியுள்ள மலையாளப் படம் ‘அம் ஆ’. இப்படத்தில், ஜாபர் இடுக்கி, மீரா வாசுதேவ், டி.ஜி.ரவி, ஸ்ருதி ஜெயன், அலென்சியர், மாலா பார்வதி, ஜெயராஜன் கோழிக்கோடு, முத்துமணி, நவாஸ் வள்ளிக்குன்னு, பேபி நிஹாரா, நஞ்சியம்மா, சரத் தாஸ், நீரஜா ராஜேந்திரன், ரகுநாத் பிரபாகரன், அஜீத் பிரபாகரன், அஜியுர்ஷா பலேரி, விஜுபால், ஜோஸ் பி ரஃபேல், சதீஷ் கே குன்னத், அம்பிலி ஓசெப், கபானி ஹரிதாஸ், சினேகா அஜித், லேதா தாஸ், ரேமாதேவி, கே.கே.இந்திரா, விஷ்ணு வி.எஸ்., லதா சதீஷ், நமிதா ஷைஜு, பிந்து எல்சா, ஜிஜினா ஜோதி, லின்சி கொடுங்கூர், லிபின் டோமுய்யா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். 

இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் படப் போஸ்டரை, விஜய் சேதிபதி தனது சமூக வலைத்த்தள பக்கத்தில் வெளியிட்டார். மேலும் படம் வெற்றி பெற, படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மலையாளத்தில் வரவேற்பை பெற்ற இப்படம்,  திரையரங்குகளில் 60 நாட்களை வெற்றிகரமாக கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து இப்போது தமிழில் வரவுள்ளது.  ஏப்ரல் 18 ஆம் தேதி படத்தின் தமிழ் பதிப்பு வெளியாகிறது.

Advertisement