சினிமா
நோ சொல்லாமல் அதை செஞ்சி இருந்தா கோடிக்கணக்கில் கொடுத்து இருப்பாங்க!! நடிகை சமந்தா..

நோ சொல்லாமல் அதை செஞ்சி இருந்தா கோடிக்கணக்கில் கொடுத்து இருப்பாங்க!! நடிகை சமந்தா..
நடிகை சமந்தா இந்திய சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவர். இவர் நடிப்பில் கடைசியாக சிட்டாடல் எனும் வெப் சீரிஸ் வெளிவந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இரண்டு திரைப்படங்களுடன் மாஸ் கம் பேக் கொடுக்கவுள்ளார். ராம் சரண் மற்றும் புஷ்பா பட இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் ரூ. 700 கோடி பட்ஜெட்டில் புதிய படம் உருவாகவுள்ளது.இப்படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். அட்லீ – அல்லு அர்ஜுன் கூட்டணியில் ரூ. 600 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்திலும் சமந்தா தான் கதாநாயகியாக கமிட்டாகியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.இந்நிலையில் சமீபத்தில் சமந்தா அளித்த பேட்டியொன்றில், நான் சினிமா துறையில் நுழையும்போது, ஒரு நடிகர் அல்லது நடிகை வெற்றிகரமாக இருக்கிறார் என்றால் எத்தனை Brand-களில் அவர்களது முகம் இருக்கிறது என்பதுதான். அப்போது நிறைய மல்டி நேஷனல் Product-கள் என்னை அவர்களின் Brand ambassador-ஆக கேட்டபோது, நான் நல்ல புகழ் மற்றும் அங்கீகாரம் கிடைக்கிறது என்று ஏற்று கொண்டேன்.சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு உடலில் சில பிரச்சனைகள் வந்ததிலிருந்து நான் அது போன்ற விளம்பரங்களில் நடிப்பதில்லை. இப்போதெல்லாம் நான் ஒரு பொருளை விளம்பரப்படுத்துவதற்கு முன், குறைந்தபட்சம் மூன்று மருத்துவர்களிடமாவது ஒப்புதல் வாங்குகிறேன். கடந்த வருடம் கூட நான் 15 பெரிய Brand-களுக்கு நோ கூறியிருக்கிறேன். கண்டிப்பாக அந்த விளம்பரங்களில் நடித்திருந்தால் கோடிக்கணக்கில் கொடுத்திருப்பார்கள் என்று சமந்தா தெரிவித்துள்ளார்.