இந்தியா
கோடை வெயிலை சமாளிக்க தண்ணீர் பந்தல்: தொடங்கி வைத்த புதுச்சேரி பொதுப்பணித்துறை அதிகாரிகள்

கோடை வெயிலை சமாளிக்க தண்ணீர் பந்தல்: தொடங்கி வைத்த புதுச்சேரி பொதுப்பணித்துறை அதிகாரிகள்
கோடை வெயில் தாக்கத்தை பொதுமக்கள் சமாளிக்கும் விதமாக புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பாக பல்வேறு இடங்களில் இலவச குடிநீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளன.அதன்படி, காரைக்கால் புதிய பேருந்து நிலையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் பந்தலை மாவட்ட ஆட்சியர் சோம சேகர் அப்பாராவ் இன்று (ஏப்ரல் 15) தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், காரைக்கால் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சந்திரசேகரன், செயற்பொறியாளர் மகேஷ், காரைக்கால் மீன்வளத்துறை துணை இயக்குனர் கோவிந்தசாமி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.இதனை சுற்றுவட்டார பகுதி மக்கள் மற்றும் பயணிகள் ஆகியோர் பயன்படுத்துகின்றனர். மேலும், தேவைக்கு ஏற்ப மற்ற இடங்களிலும் இலவச குடிநீர் பந்தல் அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி