சினிமா
‘குட் பேட் அக்லி’ படத்தில் தனது மேக்கிங் வீடியோவினை பகிர்ந்த சிம்ரன்..!

‘குட் பேட் அக்லி’ படத்தில் தனது மேக்கிங் வீடியோவினை பகிர்ந்த சிம்ரன்..!
தல அஜித்தின் மிக எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் ‘குட் பேட் அக்லி’ சில தினங்களுக்கு முன் பிரம்மாண்டமாக வெளியானது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படம் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இந்த திரைப்படத்தில் த்ரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வந்த நிலையில் தற்போது அதன் மேக்கிங் வீடியோ வைரலாகி வருகிறது.பிரபல நடிகை சிம்ரன் ‘குட் பேட் அக்லி’ படத்தின் மேக்கிங் வீடியோவை தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது.இந்த மேக்கிங் வீடியோவில் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில சிறந்த காட்சிகள் நடிகர்கள் மற்றும் படக்குழுவின் கடின உழைப்பு போன்றவை இடம்பெற்றுள்ளன. ரசிகர்கள் இந்த வீடியோவை ரசித்து படத்தின் ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் சிறப்பாக பாராட்டி வருகின்றனர். மேலும் படம் இன்று வரை 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வீடியோ இதோ