இலங்கை
இரண்டு பிள்ளைகளின் தந்தை சிகையலங்கார (சலூன்) கடையொன்றில் சடலமாக மீட்பு!

இரண்டு பிள்ளைகளின் தந்தை சிகையலங்கார (சலூன்) கடையொன்றில் சடலமாக மீட்பு!
தனது சிகையலங்கார (சலூன்) கடை கதிரையில் அமர்ந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (15) மாலை வேளையில் சம்மாந்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விளினியடி சந்தியில் மீராக்கேணி, ஏறாவூரைச் சேர்ந்த மரைக்கார் அப்துல் வசீர் (வயது 55) என்பவரே மரணமடைந்துள்ளார்.
இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்தவரின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (ப)