இலங்கை
மருதடி இரதோற்சவத்தில் இரு சங்கிலிகள் மாயம்!

மருதடி இரதோற்சவத்தில் இரு சங்கிலிகள் மாயம்!
மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய இரதோற்சவத்தில் இரண்டு சங்கிலிகள் காணாமற் போயுள்ளன என்று மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக இளவாலை மற்றும் சண்டிலிப்பாய் பகுதிகளில் இருந்து சென்ற இருவரின் சங்கிலிகளே காணாமற்போயுள்ளன. இரண்டு சங்கிலிகளுமாகச் சேர்த்து ஒரு பவுண் நிறையுடையவை என்றும் தெரியவருகின்றது. மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.