Connect with us

சினிமா

மனம் ஒத்து பிரியும் ஏ.ஆர்.ரஹ்மான்-சாய்ரா பானு!!

Published

on

Loading

மனம் ஒத்து பிரியும் ஏ.ஆர்.ரஹ்மான்-சாய்ரா பானு!!

திருமண வாழ்க்கைக்கு ஒரு எடுத்துகாட்டாக திகழும் ஜோடி என்றால் அது ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு தான். ஆனால், இவர்கள் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கு பிறகு தற்போது பிரிய உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த செய்தி ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

கடந்த 1995-ம் ஆண்டு மார்ச் 12-ம் திகதி ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவரது சினிமா வாழ்க்கையை பாதிக்காத எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை பார்க்குமாறு அம்மாவிடம் சொன்னதாக முன்பு ஒரு முறை ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருந்தார். அதே போல அவரது அம்மா பார்த்து வைத்த பெண்ணை தான் திருமணம் செய்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இருவருக்கும் கதிஜா, ரஹிமா என்ற 2 மகள்களும், அமீன் என்ற ஒரு மகனும் இருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த வளர்ச்சிக்கு வெற்றிக்கும் முக்கிய காரணமாக உறுதுணையாக இருந்தவர் சாய்ரா பானு. சினிமாவில் தற்போது வரை தனக்கென ஒரு மார்க்கெட்டை வைத்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் திருமண வாழ்க்கையிலும் பல கசப்பான தருணங்களை தான் இருவரும் அனுபவித்து வந்திருக்கின்றனர் என தற்போது தெரிகிறது.

தற்போது, இந்த திருமண வாழ்க்கையின் கடைசி கட்டமாக விவாகரத்து என்ற முடிவுக்கு இருவரும் வந்துள்ளனர். இந்த நிலையில், சாய்ரா பானு அதிகாரப்பூர்வமாக ஏ.ஆர்.ரஹ்மானைப் பிரிவதாக நேற்று அறிவித்துள்ளார். அதனைத் தொடந்து, உருக்கமாக ஏ.ஆர்.ரஹ்மானும் அறிவித்துள்ளார். இதன் மூலமாக 29 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

Advertisement

இது தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி அவரது வழக்கறிஞர் மூலம் வெளியிட்ட அறிக்கையில் கூறுவது என்னவென்றால், “திருமணமாகி பல வருடங்கள் கழித்து தனது கணவர் ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து பிரிந்து செல்லும் கடினமான முடிவை நான் எடுத்துள்ளேன்.

இந்த முடிவானது தங்களது உறவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க உணர்ச்சிப்பூர்வமான அழுத்தத்திறுகு பிறகு ஏற்பட்டுள்ளது. மிகுந்த வலி மற்றும் வேதனையில் தான் இந்த முடிவை தான் எடுத்துள்ளேன். இந்த இக்கட்டான நேரத்தில் எங்கள் நிலையை புரிந்துகொண்டு மக்கள் அனைவரும் தங்களுக்கான தனிமையை கொஞ்சம் தர வேண்டும்”, என சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தன் மனைவியின் இந்த விவாகரத்து அறிக்கைக்கு பிறகு மன வேதனையோடுஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “ஆனால் எங்களின் எண்ணம் அதனை காண முடியாத நிகழ்வாக மாறி உள்ளது. நொறுங்கிய எங்களின் இதயத்தின் எடையை சுமக்க கடவுளின் சிம்மாசனம் கூட நடுங்கலாம்.

Advertisement

பிரிவுக்கான அர்த்தத்தை கண்டறிந்து உடைந்த இதய துண்டுகளை ஒட்டவைக்க நினைத்தபோது அதற்கான பொருத்தமான இடம் இல்லை. இந்த மோசமான அத்தியாயத்தை நாங்கள் கடந்து செல்லும்போது எங்கள் மீது அன்பு காட்டி தனியுரிமையை மதிக்கும் நண்பர்களுக்கு நன்றி”, என ஏ.ஆர்.ரஹ்மான் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரையும் தொடர்ந்து இருவரின் பிள்ளைகளான கதிஜா, ரஹிமா மற்றும் அமீன் ஆகியோர் அவர்களது சமூக பக்கத்தில், “இந்த கடினமான நேரத்தில் எங்கள் தனியுரிமையை மதிக்குமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். உங்கள் புரிதலுக்கு நன்றி” என பதிவிட்டிருந்தனர்.

தமிழ் சினிமாவில், இந்த ஆண்டில் முன்னதாக பிரபல இசையமைப்பாளரும், ஏ.ஆர்.ரஹ்மான் உறவினருமான ஜி.வி.பிரகாஷ் குமார் அவரது மனைவி சைந்தவியை பிரிவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவிதாக அறிவித்தார்.

Advertisement

தற்போது, ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவி கதீஜாவை பிரிவதாக அறிவித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த விவாகரத்து தொடர்பான செய்தி இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் வாழும் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன