இலங்கை
சூட்சமமாக கடத்தப்பட்ட பெருந்தொகை ஆபத்தான பொருள் ; தமிழர் பகுதியில் சம்பவம்

சூட்சமமாக கடத்தப்பட்ட பெருந்தொகை ஆபத்தான பொருள் ; தமிழர் பகுதியில் சம்பவம்
கிளிநொச்சி புளியம் பொக்கணை பகுதியில் வாகனம் ஒன்றில் சூட்சுமமான முறையில் மறைத்துச் செல்லப்பட்ட ஒரு கோடி அறுபது இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட கஞ்சா மீட்கப்பட்டதுடன் அதனை மறைத்துச் சென்ற வாகனமும் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று பகல் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த கஞ்சா கடத்திய வாகனம் மற்றும் கஞ்சா பொதிகள் என்பன மீட்கப் பட்டதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.