இந்தியா
Schools Reopen | ஃபெஞ்சல் புயலுக்கு பின் பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Schools Reopen | ஃபெஞ்சல் புயலுக்கு பின் பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
அமைச்சர் அன்பில்
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று இரவு அல்லது நாளை காலை கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருவதால், இன்று தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
புயல் கரையை கடந்தாலும், ஆங்காங்கே மழைநீர் தேங்கியிருக்கும் என்றும், பள்ளிகள் சேதமடையலாம் என்றும் கணிக்கப்படுவடுவதால், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து திருச்சியில் பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், “சென்னை உட்பட தமிழகத்தில் மழை மற்றும் புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகள் அனைத்தும், மாணவர்கள் அமர்ந்து படிக்கும் அளவிற்கு சீரமைக்கப்பட்ட பின்னரே பள்ளிகளை திறக்க வேண்டும் என்று முதல்வர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்” என தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.