இலங்கை
யாழிற்கு சுற்றுலா சென்றவருக்கு நேர்ந்த கதி

யாழிற்கு சுற்றுலா சென்றவருக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணம்- காரைநகர் கசூரினா கடலில் குளித்துக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கிய நபரொருவரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று (16) இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாவிற்காக வருகை தந்த ஒரு குழுவில் இருந்த , 44 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே கடலில் நீராடிக் கொண்டிருந்தவேளை திடீரென நீரில் மூழ்கியுள்ளார்.
இதனையடுத்து, விரைந்து செயற்பட்ட உயிர் காக்கும் பொலிஸார் மீட்டு முதலுதவி அளித்தனர்.
பின்னர் குறித்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.