Connect with us

பொழுதுபோக்கு

விஜயா திட்டத்தை கண்டுபிடித்த முத்து; மீனா வைத்த சவால்: சிறகடிக்க ஆசையில் இன்று

Published

on

Siragansh

Loading

விஜயா திட்டத்தை கண்டுபிடித்த முத்து; மீனா வைத்த சவால்: சிறகடிக்க ஆசையில் இன்று

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த சீரியலில் விஜயாவின் சூழ்ச்சி குறித்து அண்ணாமலைக்கு தெரியவந்துள்ளது. மீனாவும் சவால் விட்டுள்ளார்.இன்றைய எபிசோட்டில், அருணுக்கு நன்றி சொல்ல, சீதாவும் அவரது அம்மாவும் அருண் வீட்டுக்கு செல்ல, அருணின் அம்மா சீதா குறித்து பாராட்டுக்களை தெரிவிக்கிறார். மேலும் அருண் சீதா இருவரும் தனியாக பேசிக்கொள்கின்றனர். அதன்பிறகு அருணின் அம்மா, சீதாவுக்கு பூ வைத்துவிட, சீதாவும் அம்மாவும் அங்கிருந்து கிளம்புகின்றனர். அப்போது இந்த அருண் தம்பி உனக்கு மட்டும் தான் ஹெல்பட் பண்றாரா என்று கேட்க, அதற்குள் ஆட்டோ வந்துவிடுகிறது. சீதா சமாளித்துவிடுகிறாள்.அடுத்த ஒரு பெரிய இடத்தில், டெக்ரேஷன் வொர்க் செய்வது குறித்து பேச சிந்தாமணி அங்கு வர, ஏற்கனவே மீனா அங்கு இருக்கிறார். இவரை பார்த்து கடுப்பாகும் சிந்தாமணி என்ன என்று விசாரிக்க, அவரும் இந்த ஆர்டரை வாங்குவதற்காக வந்துள்ளார் என்று சொல்ல, இது பெரிய இடத்து ஆர்டர், டெபாசிட் 2 லட்சம் வரைக்கும் கட்ட வேண்டும் நான் கட்டிவிடுவேன். இவரது கணவர் ஒரு டிரைவர் இவள் எப்படி கட்டுவாள் என்று கேட்க, மீனா இந்த ஆர்டரை வாங்குவேன் என்று சவால் விடுகிறாள்.பணத்தை நாளைக்கு கட்டுவதாக சொல்லிவிட்டு வர, வீட்டுக்கு வந்த மீனா இதை முத்தவிடம் சொல்ல, முத்து நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி, வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து பேசுகிறான். மீனா ஆர்டர் குறித்து சொல்ல, ஏற்கனவே இந்த வீட்டு பத்திரம் அடமானத்தில் உள்ளது. இதில் இருந்து இன்னும் 2 லட்சம் பணம் வேணும் அதை தானே கேட்க போறீங்க என்று விஜயா சொல்ல, நாங்கள் சொல்வதற்குள் நீங்களே ஒரு முடிவு செய்துகொண்டு பேசினால் எப்படி என்று முத்து சொல்கிறான்.அந்த சிந்தாமணி பெரிய ஆளு, அவங்களோடோட மோதி இந்த மீனா ஜெயிக்கவே முடியாது எதற்காக இவ போட்டி போட்டுக்கிட்டு இருக்கா என்று விஜயா திமிராக பேச, யார் அந்த சிந்தாமணி என்று அண்ணாமலை கேட்கிறார். இதை கேட்ட முத்து, ஆரம்பத்தில் இருந்து சிந்தாமணி நடந்துகொண்ட விதம், விஜயா டான்ஸ் க்ளாசில் வந்து சேர்ந்தது குறித்து சொல்கிறான். இதனால் அண்ணாமலை விஜயாவை திட்ட அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன