விளையாட்டு
MI vs SRH LIVE Score: ஐதராபாத்தை சமாளிக்குமா மும்பை? இன்று மோதல்

MI vs SRH LIVE Score: ஐதராபாத்தை சமாளிக்குமா மும்பை? இன்று மோதல்
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று வியாழக்கிழமை இரவு 7:30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 33-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.ஆங்கிலத்தில் படிக்கவும்: MI vs SRH LIVE Cricket Score, IPL 2025நடப்பு தொடரில் இதுவரை நடந்த 6 போட்டிகளில் இரண்டில் வென்றுள்ள மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கிறது. மறுபுறம், ஐதராபாத் அணி 6 போட்டிகளில் வென்று 4 புள்ளிகளுடன் 9-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த இரு அணிகளுமே தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் வென்ற கையுடன் களமிறங்குகின்றன. மும்பை அணி 205 ரன்கள் எடுத்து டெல்லியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதேநேரத்தில், பஞ்சாப் அணிக்கு எதிராக 246 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை 9 பந்துகள் மீதம் வைத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஐதராபாத். அந்த அணியின் டாப் ஆடர் வீரர்கள் தரமான ஃபார்மில் இருக்கும் நிலையில், 300 ரன்களை எட்டுவார்களாக என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. நேருக்கு நேர் ஐ.பி.எல் தொடரில் மும்பை மற்றும் ஐதராபாத் அணிகள் 23 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த 23 போட்டிகளில், ஐதராபாத் 10 போட்டிகளில் வென்றுள்ளது. அதே நேரத்தில் மும்பை அணி 13 முறை வெற்றி பெற்றுள்ளது.