சினிமா
“மூன்று கோடி டிக்கெட் விற்பனை ஆகாது..!” நடிகை பூஜா ஹெட்ஜ் ..

“மூன்று கோடி டிக்கெட் விற்பனை ஆகாது..!” நடிகை பூஜா ஹெட்ஜ் ..
கோலிவுட் முதல் பாலிவுட் வரை வெற்றி பெற்று வரும் நடிகை பூஜா ஹெக்டே, தற்போது தமிழில் “ரெட்ரோ” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூன்று பாடல்கள் சமீபத்தில் வெளியானபோது, ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. இதன் பின், பூஜா ஹெக்டே நடிக்கும் “ஜனநாயகன்” படமும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.பூஜா ஹெக்டே சமீபத்தில், ரெட்ரோ படத்திற்கான ஒரு பேட்டியில், சமூக ஊடகங்கள் பற்றிய தன் கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில், “எனக்கு இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட மூணு கோடி ஃபாலோவர்ஸ் இருக்காங்க. அதற்காக என் படத்திற்கு மூன்று கோடி டிக்கெட் விற்பனையாகும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. அதுபோல, சில பிரபலங்களுக்கு 50 லட்சம் இன்ஸ்டா ஃபாலோவர்ஸ் இருப்பாங்க. ஆனால், அவங்க படங்களுக்கு அதிக கூட்டம் வரும். எனவே சமூக ஊடகங்கள் உண்மையான உலகம் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் ” என கூறியுள்ளார்.