இலங்கை
உர மானியம் கிடைக்காததால் விவசாயிகள் விசனம்!..

உர மானியம் கிடைக்காததால் விவசாயிகள் விசனம்!..
சிறுபோக நெற்செய்கைக்குத் தேவையான உர மானியம் தாமதமாக வழங்கப்படுவதால், விவசாயிகள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதனால் உர மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அம்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள விவசாயிகள் தற்போது சிறுபோக நெற்செய்கையை ஆரம்பித்துள்ள நிலையில், அறுவடை செய்ய சுமார் 10 முதல் 15 நாட்கள் ஆகும் என அவர்கள் கூறுகின்றனர்.
இந்த இடைவெளியில் யூரியா உரத்தை இட திட்டமிட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். (ப)