இலங்கை
மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ; சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்திய மும்பை

மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ; சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்திய மும்பை
ஐ.பி.எல். தொடரின் 18ஆவது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 33ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையே போட்டி நிழவின.
இப்போட்டிக்கான நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தெரிவு செய்துள்ளது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 05 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களை பெற்று மும்பை அணிக்கு 163 வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 17 வது ஓவர் நிறைவில் 06 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கியது.