இலங்கை
விடுவிக்கக்கூடிய காணிகளை நிச்சயம் நாம் விடுவிப்போம்!

விடுவிக்கக்கூடிய காணிகளை நிச்சயம் நாம் விடுவிப்போம்!
பாதுகாப்புப் பிரச்சினைகளைக் காரணம்காட்டி மக்களின் காணிகளை தொடர்ந்தும் வைத்திருக்க முடியாது. அந்தக் காணிகள் அனைத்தும் விரைவில் விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
காணிகள் விடுவிக்கப்படக்கூடாது என்றும், போர் வரவேண்டும் என்றும்தான் சில சிங்களத் தலைவர்கள் விரும்புகின்றனர். ஆனால், அவ்வாறான நிலைப்பாட்டில் நாம் இல்லை. நிச்சயமாக காணிகள் உடன் விடுவிக்கப்படும்.
போர் நிறைவடைந்த பின்னரும் கொழும்புமுதல் யாழ்ப்பாணம் வரை பல காணிகளை விடுவிக்காது அடாத்தாக வைத்திருந்தனர். ஆனால், நாங்கள் படிப்படியாக பாதைகளை விடுவித்து வருகின்றோம். காணிகளை மட்டுமல்லாமல், விடுவிக்கக்கூடிய பாதைகளையும் நாங்கள் விடுவிப்போம் – என்றார்.