இலங்கை
உணவருந்த சென்றவர்கள் மீது தாக்குதல்; சந்தேக நபர்கள் அடையாளம்

உணவருந்த சென்றவர்கள் மீது தாக்குதல்; சந்தேக நபர்கள் அடையாளம்
காலியில் உள்ள ஒரு முன்னணி ஹோட்டலில் நேற்று முந்தினம் இரவு(16) ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தில் ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து பெண்கள், குழந்தைகளுடன் காலி சென்ற குழு ஒன்று உணவு முன்பதிவு செய்துவிட்டு காத்திருந்த குழுவினர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் கொழும்பிலிருந்து காலிக்கு விடுமுறைக்காகச் சென்று இரவு உணவிற்கு குறித்த ஹோட்டலுக்குச் சென்றிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடத்தி வருவதாகவும், உணவகத்தைச் சேர்ந்த ஆறு நபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.