சினிமா
விவாகரத்து கேள்விக்கு சூடாக பதிலடி கொடுத்த “லிங்கா” பட நடிகை..! யார் தெரியுமா..?

விவாகரத்து கேள்விக்கு சூடாக பதிலடி கொடுத்த “லிங்கா” பட நடிகை..! யார் தெரியுமா..?
பாலிவுட் சினிமாவில் தனது திறமையான நடிப்பால் அனைத்து ரசிகர்களின் மனங்களையும் கொள்ளை கொண்ட நடிகை சோனாக்ஷி சின்ஹா. தமிழ் ரசிகர்கள் மத்தியில் இந்நடிகை ரஜினிகாந்துடன் நடித்த ‘லிங்கா’ படத்தின் மூலம் அறிமுகமானார்.அத்தகைய நடிகை, சில ஆண்டுகளாக காதலித்து வந்த ஜாஹிர் இக்பாலை கடந்த ஆண்டு திருமணம் செய்திருந்தார். இவர்களின் திருமணம் மிகவும் அழகான நிகழ்ச்சியாக காணப்பட்டது. சோனாக்ஷி – ஜாஹிர் இக்பால் ஜோடி, பாலிவுட் வட்டாரத்தில் மிகவும் அழகானதாக காணப்பட்டது. இந்நிலையில் அவர்களது திருமண புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் பிரபலமாகியிருந்தது.இவர்கள் இணைந்து வெளியிடும் புகைப்படம், வீடியோ என எதுவாக இருந்தாலும் சில சமூக ஊடக பயனாளர்கள் அதற்கு எதிர்மறையான கருத்துக்களை எழுதி வருகின்றனர். குறிப்பாக, “இவர்கள் நிலையான வாழ்க்கை நடத்த மாட்டாங்க, சில மாதங்களுக்குள் விவாகரத்து ஆகிடும்” போன்ற மோசமான கருத்துக்களை கூறியிருந்தனர்.சமீபத்தில் ஜாஹிர் இக்பாலின் ஒரு வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலானது. அதில் அவருடைய தோற்றம் மற்றும் சோனாக்ஷியுடன் காணப்படும் காதல் குறித்து சிலர் பாராட்டினார்கள். அதேநேரத்தில் சிலர் உங்கள் விவாகரத்து நெருங்கிவிட்டது என்று கருத்து தெரிவித்திருந்தனர். அதற்கு நடிகை சோனாக்ஷி “முதலில் உன் அம்மா அப்பா விவாகரத்து செய்வார்கள், பிறகு நாங்கள் செய்வோம்” என்று பதிலளித்திருந்தார்.