இலங்கை
சிஎஸ்கே அணியில் இணையும் 17 வயது அதிரடி வீரர் ஆயுஷ் மாத்ரே

சிஎஸ்கே அணியில் இணையும் 17 வயது அதிரடி வீரர் ஆயுஷ் மாத்ரே
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக செயற்பட்ட ருதுராஜ் கெய்க்வாட், முழங்கை எலும்பு முறிவு காரணமாக நடப்பு சீசனின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
இதன் காரணமாக சென்னை அணியின் புதிய கேப்டனாக மகேந்திரசிங் தோனி மீண்டும் நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மாற்று வீரராக மும்பையை சேர்ந்த 17 வயது இளம் வீரரான ஆயுஷ் மாத்ரேவை சிஎஸ்கே நிர்வாகம் சென்னை அணியில் சேர்த்தது.
இந்நிலையில் ஆயுஷ் மாத்ரே சென்னை அணியுடன் இன்று இணைந்துள்ளார்.
இதனை சிஎஸ்கே நிர்வாகம் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.