Connect with us

இந்தியா

கார்த்திகை அமாவாசை 2024: இன்று இந்த தெய்வத்தை வணங்கினால் முன்னோர்கள் சாபம் நீங்குமாம்…

Published

on

கார்த்திகை அமாவாசை 2024 - முன்னோர்கள் சாபம் நீங்க

Loading

கார்த்திகை அமாவாசை 2024: இன்று இந்த தெய்வத்தை வணங்கினால் முன்னோர்கள் சாபம் நீங்குமாம்…

கார்த்திகை அமாவாசை 2024 – முன்னோர்கள் சாபம் நீங்க

Advertisement

பொதுவாக அமாவாசை நாளில் இவை அனைத்தும் செய்வதால் முன்னோர்களின் சாபம் நம் சந்ததியினருக்கு வராமல், முன்னோர்களின் ஆசி கிடைக்க செய்ய அமாவாசை திதி கொடுக்கப்படுகிறது. மாதந்தோறும் அமாவாசை நாட்கள் வந்தாலும் தை மாதம், ஆடி அமாவாசை போன்றவை முக்கிய சிறப்பு பெற்றவை அதேபோல கார்த்திகை அமாவாசையிலும் ஒரு சிறப்பு உள்ளது. அதாவது இந்த அமாவாசை முன்னோர்களை வணங்குவதற்கு மட்டுமல்லாமல் தெய்வ வழிபாட்டிற்கும் உரிய மாதமாக இந்த கார்த்திகை மாத அமாவாசை இருக்கிறது. அதாவது இந்த கார்த்திகை மாத அமாவாசை அன்று லட்சுமி தேவி உருவெடுத்ததாகவும் சொல்லப்படுகிறது அந்த வகையில் லட்சுமி வழிபாடு இந்த அமாவாசையில் சிறப்பு பெற்றதாக விளங்குகிறது.

கார்த்திகை மாதம் என்றாலே சிவபெருமானுக்கு உரிய மாதமாக இருக்கிறது. அந்த வகையில் இந்த கார்த்திகை மாத அமாவாசை திதி நவம்பர் 30 இன்றைய நாள் 11 மணிக்கு மேல் துவங்கி நாளை டிசம்பர் 1 ஆம் தேதி மதியம் 12 மணி வரை உள்ளது. எனவே இன்று தொடங்கி நாளை வரை திதி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை அமாவாசையில் வீட்டில் அசைவம் சாப்பிடாமல், எள் தண்ணீர் தெளித்து, விரதம் இருந்து அன்னதானம் செய்ய வேண்டும். முன்னோர்களை நினைத்து திதி கொடுத்து மாலை வேளையில் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும் என்று கோவில் அர்ச்சகர் தெரிவிக்கின்றார்.

Advertisement

இந்த கார்த்திகை மாத திதி நாளில் முன்னோர்களை நினைத்து வழிபட்டு அத்துடன் மகாலட்சுமியை வழிபாடு செய்வதால் முன்னோர்கள் சாபம் நீங்கி, நினைத்த காரியங்கள் விரைவில் நடக்கும் என்றும் அத்துடன் நன்மை பெருகும் என்றும் கூறுகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன