Connect with us

உலகம்

ஏமன் துறைமுகம் மீது அமெரிக்கா கடுமையாக தாக்குதல்; 74 பேர் பலி

Published

on

Loading

ஏமன் துறைமுகம் மீது அமெரிக்கா கடுமையாக தாக்குதல்; 74 பேர் பலி


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 19/04/2025 | Edited on 19/04/2025

 

கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து,  இந்த போரில், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என 250க்கும் மேற்பட்ட இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 50,00க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகினர். இந்த போரால், மத்திய கிழக்கு பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது. மேலும், இந்த போர் உலகையே களங்கடிக்க செய்தது. 

பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவாக ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி பயங்கரவாத அமைப்பு களமிறங்கி, இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. அதுமட்டுமின்றி, செங்கடல் உள்ளிட்ட கடல் பகுதி, அமெரிக்காவின் சரக்கு கப்பல் ஆகியவற்றின் மீதும் ஹவுதி பயங்கரவாத அமைப்பு கடுமையாக தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஏமனில் உள்ள ஹவுதி பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த மார்ச் 15ஆம் தேதி அறிவித்திருந்தார். அதன்படி, ஹவுதி பயங்கரவாதிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா கடுமையான நடவடிக்களை எடுத்து வருகிறது. 

Advertisement

இந்த நிலையில், ஏமனில் உள்ள ராஸ் இசா துறைமுகம் மீது அமெரிக்கா கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 74 பேர் பலியாகியுள்ளதாகவும், 171 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல் குறித்து அமெரிக்காவின் மத்திய படை கூறுகையில், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி பயங்கரவாதிகளுக்கு எரிபொருள் மற்றும் வருவாய் கொடுக்க கூடிய விசயங்களை அழிப்பது என்று அமெரிக்கா முடிவு செய்து, இந்த தாக்குதலை நடத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளது. 

  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • ஏமன் துறைமுகம் மீது அமெரிக்கா கடுமையாக தாக்குதல்; 74 பேர் பலி

  • சிகிச்சைக்காக வந்த 5 வயது சிறுவனை புகைப்பிடிக்க வைத்த மருத்துவர்!

  • ‘பாஜகவை தனிமைப்படுத்த வேண்டும்’ – அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய எஸ்டிபிஐ

  • “ரோஹித் வெமுலா சட்டத்தை இயற்ற வேண்டும்” – கர்நாடகா அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

  • மொத்த கிராமத்திற்கே காலணிகள் விநியோகம்; பவன் கல்யாண் செய்த நெகிழ்ச்சி செயல்!

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன