சினிமா
வரதட்சணை வாங்கி கல்யாணம் பண்ணேனா? நடிகை ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம்..

வரதட்சணை வாங்கி கல்யாணம் பண்ணேனா? நடிகை ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம்..
நடிகை ரம்யா பாண்டியன் கடந்த ஆண்டு லோவல் தவான் என்பவரை திருமணம் செய்தார். திருமணமான கையோடு தாய்லாந்து தலைநகரத்தில் ஹனிமூன் கொண்டாட்டத்தில் இருந்து வந்தார்.கணவருடன் நேரத்தை செலவிட்டு வந்த ரம்யா பாண்டியன், மீண்டும் போட்டோஷூட் பக்கம் திரும்பியுள்ளார். இந்நிலையில் ரம்யா பாண்டியன், கணவர் வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கி கல்யாணம் செய்தார் என்ற செய்தி இணையத்தில் பகிரப்பட்டு வந்தது. இதனை அறிந்த ரம்யா பாண்டியன் அதற்கான விளக்கத்தையும் தந்துள்ளார்.அதில், கடந்த கொஞ்ச நாளாகவே என்னை பற்றிய சில விஷயங்கள் ட்ரெண்டாகி வருகிறது. ரம்யா பாண்டியன் வரதட்சணை வாங்கி கல்யாணம் செய்தார் என்று எழுந்துகிறார்கள். மற்ற வதந்திகள் குறித்து நான் பேசியதில்லை, ஆனால் இது உணர்ச்சிபூர்வமானதாகவும், அதற்கு விளக்கம் அளிக்கக்கூடிய விஷயமாக இருப்பதாலும் அதுபற்றி பேசுகிறேன். ஒரு பொண்ணுக்கு பொருளாதார சுதந்திரம் இருக்கணும் என்று நான் எப்போது நினைப்பேன். அதை நான் நம்புகிறேன், நான் அப்படித்தான் இருக்கணும் என்று நினைக்கிறேன்.நான் 10ஆம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே என் குடும்பத்திற்கு பொருளாதார விஷயத்தில் உதவி வருகிறேன். 11,12 ஆம் வகுப்பு ஸ்காலர்ஷிப், கல்விக்கடன் எல்லாமே நான் தான் அடைத்தேன். கல்லூரி முடித்தப்பின் நான் வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டேன். அதன்பின் சிம்லா வந்தப்பின் தான்2 வருடங்கள் பண ரீதியாக கஷ்டப்பட்டேன். அதன்பிறகில் இருந்து இன்று வரை நான் தான் பார்த்துக்கொள்கிறேன். நம்ம கொடுக்கணும் என்று நினைக்கணும், வாங்கக்கூடாது என்று நினைப்பேன்.அப்படி இருக்கும் போது கல்யாண செலவு வரும் போது, நான் தான் அவர்களை செலவு செய்யவிட்டேன் என்று எழுதினார்கள். அது நல்லதுக்காக எழுதுகிறார்கள் என்றுவிட்டேன். என் தரப்பில் இருந்து என்ன சொல்கிறேன் என்றால், கல்யாண செலவுக்குக்கூட என் ஆசைப்படிதான் நடந்தது. எந்த செலவாக இருந்தாலும் சரி, பாதிக்கு பாதி பகிர்ந்து கொள்ளலாம் என்று தான், நான் சம்பாதித்ததை கொடுத்தேன்.அப்படி நிறைய விஷயங்கள் இருக்கும் போது வரதட்சணை என்று அதை சொல்லிவிட்டார்களே என்று எனக்கு வருத்தமாக இருந்தது. பஞ்சாப்பிற்கு நாங்கள் போகும் போது அவர்கள் எங்களிடம் ஒரு விஷயம் சொன்னார்கள். என் கணவர், மாமனார், மாமியார், நாத்தனார் என்று எல்லோரும் ஸ்வீட் தான். அப்படியொரு குடும்பம் எனக்கு கிடைத்தது ஒரு ஆசீர்வாதம் என்று நினைக்கிறேன். என்னை ஒரு மகளாக, மருமகளாக பார்க்காமல் லட்சுமியாக பார்த்தார்கள்.அதனால் அவர்கள், எனக்கு நகைகள் போட்டு என்னை அழைக்கணும். அது எனக்கு பிடித்தாலும் நான் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் அவர்கள் சென்னைக்கு வந்து மீண்டும் என்னிடம் சொன்னார்கள். அதனால் தான் நான் ஒப்புக்கொண்டேன். அதை வரதட்சணை என்று யாரும் சொல்லாதீர்கள்? என்று உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார்.