Connect with us

இலங்கை

பொலிஸ் பாதுகாப்புடன் பந்தா காட்டிய ஆசிரியை; இப்படி ஆச்சே!

Published

on

Loading

பொலிஸ் பாதுகாப்புடன் பந்தா காட்டிய ஆசிரியை; இப்படி ஆச்சே!

  தனியார் நிகழ்விற்காக பொலிஸ் வாகனங்களை தவறாகப் பயன்படுத்திய 05 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பயிற்சி ஆசிரியை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க தெரிவிக்கையில்,

Advertisement

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்விற்காக வாகனங்களை ஆசிரியை கோரியதாகக் கூறினார்.

இந்த நிகழ்வில் 8000 மாணவர்கள் மற்றும் 33,000 பெற்றோர்கள் கலந்து கொள்வார்கள் என்றும், இதன் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை என்றும் அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் குழந்தைகள் சம்பந்தப்பட்டிருந்ததாலும், பின்னணி சரிபார்ப்பு தெளிவாக இருந்ததாலும், கோரிக்கையை நாங்கள் அங்கீகரித்தோம்.

Advertisement

20 பொலிசார் சில பொலிஸ் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு பொலிஸ் காரை ரூ. 200,000 அளவான கட்டணத்திற்கு வழங்கினோம்.

கட்டணம் முழுமையாக செலுத்தப்பட்ட பின்னரே நாங்கள் சேவையை வழங்கினோம்,

ஆனால் டியூஷன் ஆசிரியை வாகனங்களை கோரப்பட்ட நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, தனது நற்பெயரை உயர்த்திக் கொள்ள பயன்படுத்தியதாக எஸ்எஸ்பி தெரிவித்தார்.

Advertisement

இந்நிலையில் , பொலிஸ் வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதற்காக அவர் மீது பொலிஸ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன